ஏப்ரல் 28, பிரயாக்ராஜ் (UttarPradesh News): கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில், அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் நவீன் படேல் என்ற 53 வயது நபர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். விபத்து வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மனிதம் மறுத்துவிட்டதாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில், இ-ரிக்சா ஓட்டுநர் பாலத்தில் எதிர்திசையில் அலட்சியமாக பயணிக்க, அவரின் வாகனத்தில் அவ்வழியே சரியாக சென்றுகொண்டு இருந்த இருசக்கர வாகன ஓட்டி மோதி விபத்தில் சிக்கினார். விபத்தை ஏற்படுத்திய ரிக்சா ஓட்டுநர், எவ்விதமான சலனமும் இன்றி விதியை மீறி வாகனத்தை இயக்கி சென்றார். இதுகுறித்த பதறவைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அவ்வழியாக சென்ற நபர்களும் இருசக்கர வாகன ஓட்டிக்கு உதவ முதலில் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Lorry Tractor Collision: டிராக்டரின் மீது மோதிய லாரி; 3 வயது சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.. தந்தையின் கண்முன் துயரம்.!
गुजरात के अहमदाबाद के बाद UP का प्रयागराज
..... .... ....... .....
इंसानियत.. मानवता मानो दम तोड़ चुकी है। 2 दिन पहले अहमदाबाद मे हादसे का लाइव वीडियो आया था जिसमे हादसे के शिकार नवीन पटेल की उपचार के अभाव मे साँसे उखड़ गई थी। अब ऐसा ही हादसा प्रयागराज मे हुआ। सड़को पर… https://t.co/Uy9KKQpLt0 pic.twitter.com/uan8FORBK9
— TRUE STORY (@TrueStoryUP) April 28, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)