ஜனவரி 12, கிரேட்டர் நொய்டா (UttarPradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா, மேற்கு பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 33 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர், 6 மாத கைக்குழந்தை இருக்கிறது. பெண்ணின் கணவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். தற்போது இவர் ஆறு மாத கைக்குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், மகப்பேறுக்கு பின்னர் அவர் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார். அதனை குடும்பத்திடம் கூறாமல், மனதளவில் கடுமையான தனிமையை அனுபவித்து வந்ததாகவும் தெரியவருகிறது. Rajnath Singh meets England PM: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு.!
காரணம் என்ன?: ஆனால், அவரது கணவருடனும் எந்த பிரச்சனையும் இல்லை. இந்நிலையில், பெண்மணி நேற்று 6 மாத குழந்தையுடன் 16-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பெண் மனநலம் சார்ந்த பிரச்சனையை எதிர்கொண்டு தனிமையில் தவித்து வந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக மேற்படி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டுதான் தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.