Meenakshi Sundareswarar Thirukalyanam 2025: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல கொண்டாட்டம்..!
மதுரையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
மே 08, மதுரை (Festival News): மதுரையில் உலகப்பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு நாளும் விழாக்கள் நடக்கின்றன. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண (Meenakshi Sundareswarar Thirukalyanam) வைபவம் இன்று (மே 08) கோலாகலமாக நடைபெற்றது. அந்நேரத்தில் இந்த திருக்கல்யாணத்தை காண வந்திருந்த ஏராளமான பெண்கள் தாங்களும் தாலி சரடுகளை மாற்றிக் கொள்வார்கள். மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபவத்தை கண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அந்தவகையில், மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை 8 - 9 மணி வரையில் நடைபெற்றது. இதன் வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது. International Labour Day 2025: உலக தொழிலாளர் தினம் 2025; வரலாறு, முக்கியத்துவம் மற்றும் வாழ்த்து செய்தி இதோ..!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்:
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

