டிசம்பர் 13, மும்பை (Mumbai): இன்றளவில் இளைஞர்களிடையே எந்த விஷயத்தையும் தனது ஆபத்தையும் உணராமல், பிறரின் நலனையும் கருத்தில் கொள்ளாமல், தனது மகிழ்ச்சிக்காக மட்டும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அத்துமீறும் வினோத பழக்கம் அதிகரித்து வருகிறது. இவர்கள் சாலைகளில் பயணம் செய்யும்போதும், சாதரணமாக இருக்கும்போதும் சமூக வலைதளப்பக்கத்தில் வைரலாகி எண்ணி ஆபத்துகளையும் விலைக்கு வாங்குகிறார்கள். இவர்கள் செய்யும் சேட்டைக்கு வரும் முடிவுகளை அவர்கள் அனுபவிக்கட்டும் என நினைத்தால், சிலநேரம் அப்பாவியாக செல்வோரையும் துன்புறுத்துகின்றனர். இவர்களின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்நிலையில், இளைஞர் ஒருவர் வேகமாக பயணிக்கும் ஆட்டோவில் கம்பியை பிடித்து தொங்கியபடி உற்சாக மிகுதியில் பயணிக்க, அவரால் சைக்கிளில் சென்ற அப்பாவி மீது இடித்து விடுகிறார். நல்வாய்ப்பாக அவர் லேசான காயத்துடன் தப்பினார். அவருக்கு பின்னால் வந்த வாகன ஒட்டியும், மெதுவாக வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோ வைரலாகி, இளைஞருக்கு எதிராக கண்டனத்தை குவித்து வருகிறது. Pak Suicide Bomber Attack: இராணுவத்தினரை குறிவைத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதல்: 24 பேர் பரிதாப பலி., பாகிஸ்தானில் சோகம்.!
View this post on Instagram
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)