Northwest Pakistan Military Camp Suicide Squad Attack (Photo Credit: @PiQsuite X)

டிசம்பர் 13, பாகிஸ்தான் (World News): பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே, அந்நாட்டு அரசுக்கு எதிராக பாகிஸ்தான் தலிபான் குழு, தஹ்ரீக்-இ-ஜிஹாத் பாகிஸ்தான் குழு ஆயுதமேந்திய போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறது. இது பாகிஸ்தான் இராணுவத்திற்கு பெரும் வழியாக அமைந்துள்ளது.

தொடரும் மோதல் சம்பவங்கள்: அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்துள்ள குழுக்கள், அவ்வப்போது இராணுவத்தை குறிவைத்து பல்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இருதரப்பு உயிரிழப்பும் ஏற்படுகின்றன. Infant Rescued From Borewell: 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்பு: மீட்பு குழுவினர் அசத்தல் செயல்.! 

தற்கொலைப்படை தாக்குதல்: இந்நிலையில், நேற்று வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணம், தேரா இஸ்மாயில் கான் நகரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் இராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது.

Pakistan Military Officer (Photo Credit: @WSJ X)

டிரக்கில் வந்து அதிர்ச்சி செயல்: இந்த தாக்குதலில் உடலில் குண்டுகளை நிரப்பி வந்த 6 பேர் கும்பல், இராணுவ அதிகாரிகள் 24 பேரை கொன்றுள்ளது. எஞ்சிய பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்? என்ற விசாரணை அடைந்து வருகிறது.

சுதாரிப்பதற்குள் அனைத்தும் முடிந்தது: தேரா இஸ்மாயில் கான் அங்குள்ள பழங்குடி மக்கள் நிறைந்த நகரம் ஆகும். இந்நகருக்கு அருகேயே ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையும் அமைந்துள்ளது. காவல் நிலையத்திற்கு மேலே இராணுவ அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், டிரக்கில் வந்த பயங்கரவாத குழு சற்றும் எதிர்பாராத வேளையில் தாக்குதல் நடத்தி இருக்கிறது. Rinku Singh Six Broke Glass: ரிங்கு சிங் அடித்தே சிக்ஸரால் கண்ணாடி சேதம்: கௌசிக் போல குறுக்கே புகுந்த மழையால், வெற்றிவாகை சூடிய தென்னாபிரிக்கா.! 

பிரதமர் இரங்கல்: இதனால் கட்டிடமும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்தில் 6 பயங்கரவாதிகளும் உடல் சிதறி பலியாகினர். இந்த விசயத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வார் உல் ஹக், பாயங்கரவாதிகளின் செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.