Viral Video: 78 வயது மாமியாரை கொடூரமாக தாக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் தனது 78 வயது மாமியாரை கொடூரமாக தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

Woman Attacking Mother-in-Law (Photo Credit: @priyarajputlive X)

ஜூலை 09, கோரக்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் (Gorakhpur) ஒரு பெண் தனது 78 வயது மாமியாரை கொடூரமாக தாக்குவது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தில், வயதான பெண்ணின் முகம் மற்றும் கண்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கான்ட் காவல்நிலையப் பகுதியில் கடந்த ஜூன் 28ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர், பாதிக்கப்பட்டவரின் கணவர் தினேஷ் சந்திர ஜெய்ஸ்வாலின் புகாரின்பேரில், நிஹாரிகா என்ற அவரது மருமகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது.. போலீஸ் விசாரணை..!

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement