செப்டம்பர் 11, கரீம்நகர் (Telangana News): தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் (Karimnagar) மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜகத்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக கடந்த செப்டம்பர் 06ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளம்பெண் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு, மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் சென்றுள்ளார். Viral Video: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு அடி, உதை.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
இளம்பெண் பாலியல் பலாத்காரம்:
அப்போது, அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மறைத்துவிட்டு, இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். மயங்கிய இளம்பெண்ணை, அவர் பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். இதன்பின்னர், அறைக்கு சென்ற பெண்ணின் பெற்றோர், தனது மகள் மயங்கிய நிலையில் அலங்கோலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
லேப் டெக்னீசியன் கைது:
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது, மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரியும் மகாராஷ்டிராவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 23) என்பது தெரியவந்தது. மதுபோதையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3