ஜூலை 28, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் (Pune) ஷிண்டேவாடி பகுதியில் கெத் சிவபூர் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளம் ஜோடியின் வீடியோ வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில், பெண் பைக்கின் பெட்ரோல் டேங்கில் பின்னோக்கி அமர்ந்திருப்பதையும், ஆண் பைக்கை அதிவேகமாக ஓட்டுவதையும் காணலாம். இருவரும் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் நெருக்கமாக இருப்பதைக் காட்டுகிறது. பெண் முகத்தை ஸ்கார்ஃப்பால் மூடியபடி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் சாலைகளில் இதுபோன்ற பொறுப்பற்ற மற்றும் ஆபாசமான செயல்கள் அதிகரித்து வருவது குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 6 Year Old Girl Dies: வெறிநாய் கடித்ததில் காய்ச்சல் வந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு.. தடுப்பூசி போட்டும் சோகம்.!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)