ஜூலை 28, புதுடெல்லி (New Delhi News): புதுடெல்லி மாநிலத்தில் உள்ள ரோகிணி, பூத் கலன் பகுதியில் வசித்து வரும் சிறுமி சாவி ஷர்மா (வயது 6). இவர் அங்குள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதி நாய் கடியால் பாதிக்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். சிறுமி தனது அத்தையின் வீட்டுக்கு சாலையோரம் நடந்து சென்ற போது தெருநாய் ஒன்று அவரை பல இடங்களில் கடித்த நிலையில், சிறுமியை மீட்க சென்ற 64 வயது மூதாட்டியையும் நாய் கடித்துள்ளது.
நாய் கடியால் பாதிக்கப்பட்ட சிறுமி :
கடந்த சில நாட்களாகவே அந்த நாய் தெருவில் வந்து செல்லும் இருசக்கர வாகனத்தை விரட்டி வந்த நிலையில், சிறுமியை கடித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று நாய் கடியால் பாதிக்கப்பட்ட சிறுமி அங்கு இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதற்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், ஜூலை 28ஆம் தேதி மூன்றாவது கட்ட தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. TCS Layoffs: 12,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த முன்னணி நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!
நாய்க்கடி தொற்று :
இதனிடையே சிறுமிக்கு காய்ச்சல் ஏற்படவே, பருவ கால காய்ச்சலாக இருக்கலாம் என முதலில் பெற்றோர்கள் நினைத்துள்ளனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அங்கு அவருக்கு நாய்க்கடி தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனையில் தோற்று உறுதி செய்யப்பட்டது.
சிகிச்சை பலனின்றி மரணம் :
இதனால் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் விசாரணை :
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் உண்மையான தந்தை சந்தோஷ் சர்மா என்பதும், அவர் தாயை இழந்த காரணத்தால் சதீஷ் சர்மா மற்றும் மஞ்சு தம்பதியால் தத்தெடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. சிறுமி 4 மாத குழந்தையாக இருக்கும்போது தத்தெடுத்தவர்கள் அன்புடன் வளர்த்து வந்த நிலையில், தற்போது சிறுமி நாய்க்கடி காரணமாக பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.