Viral Video: சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..!

உத்தர பிரதேசத்தில் சிறுமி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது கார் மோதி நசுங்கி பலியான வீடியோ காட்சிகள் வைரலாகிறது.

Viral Video In UP (Photo Credit: @SunilKumarpress X)

செப்டம்பர் 12, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் (Kanpur) வீட்டிற்கு வெளியே சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது கார் ஏறியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் (செப்டம்பர் 10) நடந்த இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. Woman Gang Rape: இந்தியாவே அதிர்ச்சி.. ராணுவ அதிகாரிகளுடன் சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. 7 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்..!

இச்சம்பவம் பர்ரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலையில் 3 வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், சாலையில் இருந்த குழந்தையை கவனிக்காமல் கடந்து சென்றார். பின்னர், பக்கத்து வீட்டில் இருந்து வந்த கார் ஒன்று விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது ஏறியது. அதில், சிறுமி கார் டயரில் சிக்கி (Child Dies By Accident) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், அந்த கார் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சிறுமி பலியான சிசிடிவி வீடியோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)