செப்டம்பர் 12, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் (Indore) மாவட்டத்தில் சுற்றுலாவுக்குச் சென்றபோது, இரண்டு இளம் ராணுவ அதிகாரிகள் (Army Officers) மற்றும் அவர்களது இரண்டு பெண் நண்பர்களைத் தாக்கிய மர்ம நபர்கள், அவர்களில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளனர். நேற்று முன்தினம் (செப்டம்பர் 10) 23 மற்றும் 24 வயதுடைய இளம் ராணுவ அதிகாரிகள் இரண்டு பெண் நண்பர்களுடன் சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். Hit By Train While Making Reel: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பறிகொடுத்த குடும்பம்.!
இதனையடுத்து, நேற்று (செப்டம்பர் 11) அதிகாலை 2 மணியளவில், மோவ்-மண்டலேஷ்வர் (Mhow-Mandleshwar) சாலையில் உள்ள பிக்னிக் ஸ்பாட் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 7 பேர், காரில் அமர்ந்திருந்த 3 பேரையும் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களது இரண்டு பெண் நண்பர்களையும் தாக்கி வலுக்கட்டாயமாக பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். சற்று தொலைவில் இருந்த மற்றொரு ராணுவ அதிகாரி இதனை பார்த்தவுடன், உடனே சம்பவம் குறித்து தனது மூத்த அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரை கண்டதும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர், இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, காலை 6 மணிக்கு பாதிக்கப்பட்ட 4 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு வந்தனர். அதில், பெண் ஒருவரை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் (Gang Rape) செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.