ஏப்ரல் 01, நொய்டா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் (Noida) உள்ள செக்டார் 126 காவல்நிலையப் பகுதியின், செக்டார் 94இல் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. சாலையில் சென்றுகொண்டிருக்கும் ஆட்டோவில் இரண்டு வாலிபர்கள் சாகசங்கள் செய்துள்ளனர். நெடுஞ்சாலையில் பல பெரிய வாகனங்கள் செல்கின்றனர். அதே சாலையில், ஒரு ஆட்டோ அதிவேகத்தில் செல்வதையும், ஒரு வாலிபர் ஆட்டோ கூரையில் அமர்ந்து ஸ்டண்ட் செய்வதையும், மற்றொரு வாலிபர் பக்கவாட்டில் தொங்கி ஸ்டண்ட் செய்வதையும் காணலாம். இந்த ஆபத்தான சம்பவ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. 400 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து தொழில் நடத்திய கொடூரம்.. தம்பதி அதிரடி கைது..!
வீடியோ இதோ:
#Noida : सड़कों पर रात में स्टंट करने का वीडियो वायरल
ऑटो की छत पर बैठ कर स्टंट करने का वीडियो वायरल
ऑटो की साइड में भी खड़ा दिखा युवक,चालक भी ऑटो में सवार था
बिना शर्ट पहने दो युवक एक ऑटो पर करते दिखे स्टंट
थाना सेक्टर 126 इलाके के सेक्टर 94 का बताया जा रहा है वीडियो… pic.twitter.com/QcESCubX7k
— News1India (@News1IndiaTweet) April 1, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)