Girl Sad (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 01, நொய்டா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் (Noida) சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. தகவலின்பேரில், நொய்டாவில் உள்ள உஜ்வால் கிஷோர் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் உஜ்வாலும், அவரது மனைவி நீலுவும் சேர்ந்து, சைப்ரஸ் நாட்டை சேர்ந்த 'டெக்னிஸ்' என்ற நிறுவனத்துடன் சேர்ந்து ஆபாச வீடியோ இணைய தளங்களை நடத்தி வந்தது தெரியவந்தது. இதற்காக சட்டவிரோதமாக 15.66 கோடி வெளிநாட்டு நிதியை பயன்படுத்தியுள்ளனர். Commercial LPG Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு.. விவரம் இதோ..!

மாடலிங் அழகிகளை ஆபாச வீடியோ எடுத்த தம்பதி:

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உஜ்வால் இதற்கு முன்பு ரஷ்யாவில் இதே தொழிலை செய்து வந்துள்ளார். அதன்பிறகு இந்தியாவிற்கு வந்து கடந்த 5 ஆண்டுகளாக தனது மனைவியுடன் சேர்ந்து இத்தொழிலை செய்து வந்துள்ளார். இவர்கள் தங்களுக்கு தேவையான மாடல் அழகிகளை பேஸ்புக் மூலம் தேர்வு செய்து, இதற்காக பிரத்யேகமாக ‘echato.com’ என்ற இணைய பக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் மாடலிங் வாய்ப்பு கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர். இந்த விளம்பரங்களை பார்த்து பல பெண்கள் மாடலிங் வாய்ப்பு தேடி அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களிடம் மாடலிங் ஒத்திகை கற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி, ஆன்லைன் ஆபாச வீடியோவில் நடித்தால் மாதம் ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

தம்பதி கைது:

இதனை நம்பி, வலையில் விழும் பெண்களை ஆபாச வீடியோக்களை எடுத்து ஆன்லைனில் வெளியிட்டனர். மேலும், இந்த வீடியோக்களை ஆன்லைனில் பார்க்க வாடிக்கையாளர்களிடம் பணம் கட்டி டோக்கன் வாங்கும்படி கூறுகின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தில் 75 சதவீத பணம் தம்பதிகளுக்கும், 25 சதவீத தொகையை மாடல் அழகிகளுக்கு கொடுத்து வந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் ரூ.22 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளனர். வீட்டில் சோதனை நடத்திய போது, அங்கு ரூ.8 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் இத்தொழிலில் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்பதியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.