மார்ச் 13, புதுடெல்லி (Trending Video): ஒவ்வொரு வீடு, அலுவலகத்திலும் பாதுகாப்பு என வாசல் கதவு இருக்கும். இந்த வாயில் கதவுகள் இன்றளவில் பெரும்பாலும் இரும்பு கொண்டு அமைக்கப்படுகிறது. இவ்வாறான இரும்பு கதவுகளின் தரம் தொடர்பாக ஒவ்வொரு மாதம் ஒருமுறையும் சோதனை அவசியம். ஏனெனில், வாசலில் இருக்கும் கதவுகள் மழை, குளிர், வெயில் என அனைத்து காலத்திலும் பாதிக்கப்பட்டு இருக்கும். இதனால் கதவுகளை தாங்கும் அமைப்பில் சில நேரம் இரும்பு துருப்பிடித்து விழும் ஆபத்தும் உண்டு. இதனிடையே, இரும்பு கதவு ஒன்று, திடீரென சரிந்து விழும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. கதவை மூட முற்படும் பெண் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். நல்வாய்ப்பாக கதவு சாலையில் விழும்போது, யாரும் செல்லவில்லை. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. Parking Murder: திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்.. பார்க்கிங் தகராறில் இளம் விஞ்ஞானி நடுரோட்டில் அடித்துக்கொலை.. பதறவைக்கும் காட்சிகள்.!
வீட்டின் கதவு அடைக்கப்படும்போது, கதவு சாய்ந்து விழும் பதறவைக்கும் காட்சி:
At least she was able to close the door. pic.twitter.com/NZPORC5lTc
— The Goddess () March 12, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)