IISER Scientist Abhishek Swarnkar Murder Case (Photo Credit: @timesofindia / @MirrorNow X)

மார்ச் 13, மொஹாலி (Punjab News): பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி, செக்டர் 66 பகுதியில் வசித்து வருபவர் அபிஷேக் ஸ்வர்ணகர் (வயது 39). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், உடல்நல பிரச்சனை காரணமாக சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். இதனையடுத்து, அவருக்கு கிட்னி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், அவருடன் பிறந்த திருமணமான சகோதரிகள் கிட்னியை தானமாக கொடுக்க முன்வந்தது, அதன் பெயரில் அறுவை சிகிச்சை நிறைவு பெற்று இருக்கிறது.

வாகன நிறுத்துமிடத்திற்கு நடந்த சண்டை:

தற்போது அபிஷேக் இளம் விஞ்ஞானியாக இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக அவர் மொஹாலியில் தங்கியிருக்கும் நிலையில், இவரது சொந்த ஊர் ஜார்க்கண்ட் மாநிலமாகும். தனது தாய்-தந்தையுடன் மொஹாலியில் உள்ள வீட்டில் அவர் இருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு சுமார் 08:30 மணியளவில், அபிஷேக் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. Child Dies: கார் கண்ணாடியில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி.. சோக சம்பவம்..!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் மீது தாக்குதல்:

வாகன நிறுத்தும் இடம் தொடர்பாக நடந்த சண்டையில், அபிஷேக்கின் மீது எதிர்த்தரப்பு குடும்பத்தினர் கடுமையான தாக்குதலை முன்னெடுத்தனர். இந்த சம்பவத்தில் நிலைகுலைந்து விழுந்த அபிஷேக், உடனடியாக குடும்பத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு அபிஷேக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், சமீபத்தில் தான் அவர் கிட்னி அறுவை சிகிச்சை செய்து கொண்ட காரணத்தால், காயம்பட்டதும் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை விசாரணை & கைது:

இதனையடுத்து, கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த மொகாலி காவல்துறையினர், விஞ்ஞானியை கொலை செய்த நபர்களை கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இளம் விஞ்ஞானியின் மறைவுக்கு ஆராய்ச்சி நிறுவனமும் தனது இரங்கலை தெரிவித்து, குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

அபிஷேக் மீது தாக்குதல் நடத்த அதிர்ச்சியூட்டும் காணொளி: