Viral Video: "அம்மா தம்பிய நான் பார்த்துகிறேன் மா".. சின்சான்போல சுட்டிப்பையன் செய்த சேட்டை.. வைரல் வீடியோ இதோ.!
பிறந்த குழந்தைக்கு பவுடர் அடித்துவிடும் குழந்தையின் சுட்டித்தனமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜூலை 26, வைரல் (Viral Video): ஒரு குடும்பத்தை மிகுந்த மகிழ்ச்சியாகவும், பெற்றோர்களுக்கு எத்தனை கவலைகள் இருந்தாலும் அதை மறக்க வைக்கும் ஆற்றலும் குழந்தைகளுக்கு உண்டு. குழந்தைகள் இருக்கும் வீட்டில் சிரிப்பு சத்தத்திற்கு குறைவே இருக்காது. அதேபோல, குழந்தைகள் செய்யும் சுட்டித்தனமும், அவர்கள் செய்யும் சேட்டைகளுக்கும் எல்லையே இருக்காது. அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு குழந்தை செய்த சேட்டை வைரலாகி வருகிறது. பிறந்த குழந்தைக்கு பவுடர் அடித்துவிடும் குழந்தையின் சுட்டித்தனமான வீடியோ தான் அது. குழந்தையின் குறும்புத்தனத்தை ரசித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தி வருகின்றனர். குழந்தைகளின் அழகான குறும்புகளுக்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. Diamonds In Mercury: என்னது இவ்வளவு வைரமா! கிரகம் முழுவதும் கொட்டு கிடக்கும் வைரம்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி..!