Mumbai Police Traffic Advisory: வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்களுக்கு மும்பை காவல்துறை வேண்டுகோள்..!
இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க வான்கடே மைதானத்தை சுற்றி ரசிகர் கூட்டம் அதிகமாக இருப்பதால், மரைன் டிரைவ் நோக்கி யாரும் வர வேண்டாம் என மும்பை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜூலை 04, மும்பை (Maharashtra News): ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அதன், வெற்றியை கொண்டாட (Victory Parade) இன்று மாலை 5 மணிக்கு, திறந்தவெளி பேருந்தில் மும்பையில் உள்ள மரைன் டிரைவ் முதல் வான்கடே நோக்கி இந்திய வீரர்கள் வெற்றிப் பெற்ற கோப்பையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி அணிவகுப்புக்காக வான்கடே மைதானத்தை சுற்றி ரசிகர்கள் கூட்டம் அதிகமாக சென்றுக்கொண்டிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் மரைன் டிரைவ் நோக்கி செல்வதை தவிர்க்குமாறு மும்பை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். Central Govt Employees PF Schemes: பிஃஎப் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1%.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு..!