BAN vs IRE 2nd Test Earthquake (Photo Credit : @ICCAsiaCricket X)

நவம்பர் 21, வங்கதேசம் (World News): வங்கதேச நாட்டில் இன்று காலை சுமார் 10 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவாகியது. அங்குள்ள தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நர்சிங் டி என்ற மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக 6 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நர்சிங் டி மாவட்டத்தின் தென்மேற்கு திசையில் 13 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் மைதானத்தில் நிலநடுக்கம்:

இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது வங்கதேசம் - அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற்ற மைதானத்திலும் எதிரொலித்தது. இதனால் ஆட்டம் சற்றுநேரம் தடைபட்ட நிலையில், பின்னர் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது. நிலநடுக்கத்தை உணர்ந்த ரசிகர்கள் பலரும் மைதானத்தை விட்டும் வெளியேறினர். அயர்லாந்து அணி 3 டி20 போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்டதால் கிரிக்கெட் வீரர்கள் சற்று நேரம் தரையில் அமர்ந்து கொண்டு பின் விளையாடி வருகின்றனர். IND vs SA 2nd Test: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் எப்போது? வெற்றி யாருக்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

வங்கதேசம் Vs அயர்லாந்து 2வது டெஸ்ட் (Bangladesh vs Ireland Test):

2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 476 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்ஸில் வங்கதேச அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. வங்கதேசம் மட்டுமல்லாது இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொல்கத்தா, அசாம் மாநிலம், கவ்ஹாத்தி உட்பட பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

வங்கதேசம் எதிர் அயர்லாந்து மோதும் கிரிக்கெட் போட்டியில் நிலநடுக்கம்: