KL Rahul Visit Nagpur Sai Baba Temple: நாக்பூர் சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல்..!
நாக்பூர் சாய் பாபா கோவிலுக்கு நேரில் வந்த கிரிக்கெட்டர் கே.எல் ராகுல், அங்கு சுவாமி தரிசனம் செய்தார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது.
பிப்ரவரி 08: கண்ணனூர் லோகேஷ் ராகுல் (Kannanur Lokesh Rahul) என்ற இயற்பெயரை கொண்ட கே.எல் ராகுல் (KL Rahul), இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வீரர்களுள் ஒருவராவார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் துணை (Vice Captain) தலைவராகவும் பதவி வகிக்கிறார். வலதுகை மட்டைப்பந்து (Righthand Batsman) ஆட்டத்தில் சுழன்று அடிக்கும் கே.எல். ராகுல் சிறந்த விக்கெட் கீப்பிங் (Wicket Keeping) வீரரும் ஆவார். இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் (Nagpur, Maharashtra) இருக்கும் சாயிபாபா கோவிலுக்கு (Sai Baba Temple) நேரில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. Mahad MIDC Explosion: கெமிக்கல் ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. பணியாளர்கள் கதி என்ன?… அதிர்ச்சி வீடியோ வைரல்.!