பிப்ரவரி 19, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று டெல்லி - உபி வாரியர்ஸ் (Delhi Vs UP Warriorz) அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. டாஸ் வென்ற டெல்லி பீல்டரிங் முதலில் தேர்வு செய்ய, உபி பெண்கள் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய கிரண் நவ்காரே 27 பந்துகளில் 51 ரன்னும், வ்ரிந்தா தினேஷ் 15 பந்துகளில் 16 ரன்னும், தீப்தி ஷர்மா 7 பந்துகளில் 7 ரன்னும், ஸ்வீதா செஹ்ராவத் (Shweta Sehrawa) 33 பந்துகளில் 37 ரன்னும், கிரேஸ் ஹாரிஸ் 14 பந்துகளில் 12 ரன்னும், சினிலே ஹென்றி 15 பந்துகளில் 33 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு உபி வாரியர்ஸ் அணி 166 ரன்கள் எடுத்தது. இதனால் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது. Kiran Navgire: 50 ரன்களை கடந்து கிரண் அசத்தல்.. சிக்ஸர், பவுண்டரி மழையால் இன்ப வெள்ளத்தில் ரசிகர்கள்.!
டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயம்:
Innings Break!
Power-packed batting show propel #UPW to 1⃣6⃣6⃣/ 7⃣ 🎯
An interesting #DC chase on the other side ⌛️
Scorecard ▶ https://t.co/9h5ufjdTrn#TATAWPL | #UPWvDC pic.twitter.com/J0UF5GQAnA
— Women's Premier League (WPL) (@wplt20) February 19, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)