பிப்ரவரி 19, வதோதரா (Cricket News): குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில், பெண்கள் பிரீமியர் லீக் 2025 (Women's Premier League 2025) போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஆறாவது நாள் ஆட்டத்தில், உபி வாரியர்ஸ் அணி - டெல்லி கேபிட்டல்ஸ் (UP Warriorz Vs Delhi Capitals Women's WPL 2025) அணி மோதியது. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்ததால், உபி வாரியஸ் அணி பேட்டிங் செய்தது. UPW Vs DC Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக்.. டெல்லி - உபி வாரியர்ஸ் அணிகள் மோதல்.. டாஸ், அணி வீரர்கள் அப்டேட் இதோ.! '

நவ்கரே அசத்தல் பேட்டிங்: 

உபி வாரியர்ஸ் அணியின் சார்பில் விளையாடிய கிரண் நவ்கரே (Kiran Navgire), 27 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் தொடக்கத்தில் இருந்து நின்று ஆடிய நவ்கரே, 6 பவுண்டரி, 3 சிக்ஸர் வெளுத்து வாங்கினார். இதனால் அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. அவரின் ஆட்டம் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பெண்கள் கிரிக்கெட் பிரிவில் பல சாதனைகளை படைத்துள்ள நவ்கரே, அதிக ரன்களை விரைந்து குவிக்கும் திறன் கொண்ட வீராங்கனை ஆவார்.

இன்றைய போட்டியில் வெளுத்து வாங்கிய கிரண்:

50 ரன்களை கடந்து அசத்திய கிரண்:

27 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்திய கிரண், விடியோவை கீழுள்ள இணைப்பில் சென்று பார்க்கவும்:

அருந்ததி ரெட்டியின் பந்துவீச்சால் பறிபோன விக்கெட்: