வானிலை: 15 மாவட்டங்களில் கனமழை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை.!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 23, நுங்கம்பாக்கம் (Weather News): தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை 4 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Dharmapuri News: வீட்டில் புகுந்த அரசுப்பேருந்து.. 4 வயது சிறுமி பரிதாப மரணம்.!
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை :
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) July 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 23, 2025 01:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

