ஜூலை 23, தருமபுரி (Dharmapuri News): தருமபுரி மாவட்டத்தில் உள்ள உழவன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி சோனியா. தம்பதிக்கு 4 வயதுடைய அத்விகா என்ற மகள் உள்ளார். சிறுமி இன்று காலை வழக்கம் போல வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அவரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். MK Stalin Health Status: முதல்வர் ஸ்டாலின் எப்போது வீடு திரும்புவார்?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து :
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுனர் தேவராஜ் என்பவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை தொடர்ந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியதில், ஸ்டீரிங் ராடு கட்டானதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதன் காரணமாக வீட்டில் மோதியதில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது.
தர்மபுரி நோக்கி சென்ற 2-B அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சிறுமி மீது மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.