Meditation Day Awareness Programme: தியான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தேவகோட்டை கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!

சிவகங்கையில் உள்ள தேவகோட்டை ஶ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இன்று சர்வதேச தியான தினம் அனுசரிக்கப்பட்டது.

Meditation Day Awareness Programme: தியான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தேவகோட்டை கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு..!
Meditation Day Awareness Programme (Photo Credit: @RabinKumar72566 X)

டிசம்பர் 20, தேவகோட்டை (Sivaganga News): உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21ஆம் தேதி உலக தியான தினமாக (World Meditation Day) அனுசரிக்கபட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஶ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் சர்வதேச தியான தினம் இன்று (டிசம்பர் 20) நடைபெற்றது. இந்நிகழ்வினை கல்லூரி முதல்வர் பேரா. நாவுக்கரசு அவர்கள் துவக்கி வைத்தார். இதனையடுத்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தேவகோட்டை தியான பயிற்சியாளர்கள் திரு. மரிய செல்வராஜ், திரு. ஶ்ரீரங்க பெருமாள் மற்றும் திரு. ரவிச்சந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா மற்றும் தியானம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை (Awareness Programme) எடுத்துரைத்தனர். மேலும், இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ். மூர்த்தி மற்றும் பேரா. நாகபர்வதம் ஆகியோர் செயல்பட்டனர். International Human Solidarity Day 2024: சர்வதேச மனித ஒற்றுமை தினம்.. வரலாறும் முக்கியதுவங்களும்..!

உலக தியான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 20, 2024 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).