International Human Solidarity Day (Photo Credit: LatestLY)

டிசம்பர் 20, டெல்லி (Special Day): ஐநா பொது சபையால் (UN General Assembly) அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச மனித ஒற்றுமை தினம் (International Human Solidarity Day) ஆண்டு தோறும் டிசம்பர் 20-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அரங்கில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் முக்கியமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாள் உலக மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ஒற்றுமையை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது. Astrology: 2025 ஆம் ஆண்டு உத்திராடம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

வரலாறு:

ஐநா பொது சபை கடந்த 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ல் மனித உறவுகளின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகவும், உலக மக்களுக்கும் - நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைத் தீர்மானிக்கும் அடிப்படை மற்றும் உலகளாவிய மதிப்புகளில் ஒன்றாகவும் “ஒற்றுமை” இருப்பதாக அறிவித்தது. தொடர்ந்து உலகில் உள்ள பல கலாச்சாரங்களில் சமத்துவம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்வதில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை மக்கள் மற்றும் நாடுகளுக்கு வலியுறுத்த டிசம்பர் 20-ம் தேதியை சர்வதேச மனித ஒற்றுமை தினமாக அறிவித்தது.