Peacocks Death Mystery: மர்மமான முறையில் காட்டுப்புறத்தில் மயில்கள் உயிரிழப்பு.. மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்.!!
காட்டுப்பகுதியில் மர்மமாக மயில்கள் உயிரிழந்து கிடைக்க, அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? ஒரே இடத்தில் எப்படி மயில்கள் அனைத்தும் இறந்து கிடந்தன என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
மார்ச் 07, பூலாங்குளம் (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள பூலாங்குளம் (Poolankulam, Madurai) கிராமத்தின் காட்டுப்பகுதியில் மயில்கள் இறந்து (Peacocks) கிடப்பதாக மதுரை வனச்சரக (Madurai Forest Department) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மயில்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மயில்கள் விஷம் கலந்த உணவு ஏதேனும் சாப்பிட்டு உயிரிழந்ததா? அல்லது வேறு இடத்தில் உயிரிழந்த மயில்கள் கொண்டு வந்து அங்கு போடப்பட்டனவா? என விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை முடிவில் மயில்களின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். Marandahalli Elephant Died: சட்டவிரோத மின்வேலியால் கொடூரம்.. கோடைக்கு புலம்பெயர்ந்த யானைகள் மின்சாரத்தில் சிக்கி பரிதாப பலி.!
Tamil Nadu | Several peacocks found dead in Poolankulam village of Madurai district.
Case registered, investigation underway, says Madurai Wildlife Range Officer. pic.twitter.com/gbTJpTnnbL
— ANI (@ANI) March 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 07, 2023 06:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

