Marandahalli Elephant Died: சட்டவிரோத மின்வேலியால் கொடூரம்.. கோடைக்கு புலம்பெயர்ந்த யானைகள் மின்சாரத்தில் சிக்கி பரிதாப பலி.!

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகள் கோடை காலத்தில் இடம்பெயர்ந்து செல்வது உண்டு. மலையோரங்களில் பண்ணை வீடு, தோட்டம் வைத்துள்ள மிராசுதார்கள், விலங்குகளை அவர்களின் தோட்டங்களில் இருந்து விலக்கி வைக்க கொஞ்சம் கூட நல்லெண்ணம் இல்லாது வேலிகளில் மின்சாரத்தை பாய்ச்சி அதன் உயிரை குடித்து வருகின்றனர்.

Marandahalli Elephant Died: சட்டவிரோத மின்வேலியால் கொடூரம்.. கோடைக்கு புலம்பெயர்ந்த யானைகள் மின்சாரத்தில் சிக்கி பரிதாப பலி.!
Marandahalli of Dharmapuri District, Elephant Death touch Electric Fence Issue Visual (Photo Credit: ANI)

மார்ச் 07, மாரண்டஹள்ளி (Dharmapuri News): தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி (Coimbatore, Krishnagiri, Dharmapuri) மாவட்டங்களில் யானைகள் (Elephant Forests) அதிகம் உலாவும். இதனால் அங்குள்ள தோட்ட உரிமையாளர்கள் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக இரும்பு வேலிகளில் மின்சாரத்தை (Electricity) பாய்ச்சுவதும், அவ்வழியே செல்லும் வனவிலங்குகள் அடிபடுவதும் தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஹள்ளி ( Marandahalli, Dharmapuri district) கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியால், அதனை கடக்க முயன்ற 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தர்மபுரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Rajnath Singh Speech: இந்தியாவை எதிர்காலத்தில் தாக்க திட்டமிட்டுள்ள நாடுகள்… உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 07, 2023 03:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).