செப்டம்பர் 29, சென்னை (Chennai News): பத்மஸ்ரீ விருதுபெற்ற இயற்கை விவசாயி மூதாட்டி பாப்பம்மாள் (vythu 105), வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார். அவர் இயற்கை விவசாயத்திற்காக தனது வாழ்நாட்களை அர்ப்பணித்து வாழ்ந்து வந்த நிலையில், அவரின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் கௌரவப்படுத்தி இருக்கின்றன. இதனிடையே, அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், "விவசாயத்துறையில் ஒரு உண்மையான ஆன்றோராகவும் இயற்கை விவசாயத்தின் சாம்பியனாகவும் விளங்கிய பத்மஸ்ரீ விருது பெற்ற திருமதி. பாப்பம்மாள் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள், நீடித்த விவசாயத்தின் ஆணிவேரளவில் அழியாத அடையாளத்தை விட்டுள்ளன. பணிவான பண்புக்காகவும் கனிவோடு பழகும் குணத்துக்காகவும் போற்றப்படும் அவர், எண்ணற்ற மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என கூறியுள்ளார். Udhayanidhi Stalin: "உதயநிதி ஸ்டாலின் எனும் நான்" துணை முதல்வராக பொறுப்பேற்கிறார் உதயநிதி; கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்.!
ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல் குறிப்பு:
"விவசாயத்துறையில் ஒரு உண்மையான ஆன்றோராகவும் இயற்கை விவசாயத்தின் சாம்பியனாகவும் விளங்கிய பத்மஸ்ரீ விருது பெற்ற திருமதி. பாப்பம்மாள் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள், நீடித்த விவசாயத்தின் ஆணிவேரளவில் அழியாத அடையாளத்தை விட்டுள்ளன. பணிவான… pic.twitter.com/TRfIoDHB8N
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 28, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)