Dy CM Udhayanidhi Stalin (Photo Credit: @DMKITwing X)

செப்டம்பர் 29, சென்னை (Chennai News): 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர், தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ்நாட்டின் அரசாட்சியை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் நடைபெற்று முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதலமைச்சர் பொறுப்பு மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தது. துணை முதல்வர் பொறுப்பு என்பது யாருக்கும் வழங்கப்படாமல் இருந்தது. Namakkal: ஹரியானா மாநில கொள்ளை கும்பல் நாமக்கலில் சுட்டுப்பிடிப்பு; சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்.!

ஆளுநர் ஒப்புதல்:

இதனால் துணை முதல்வர் பொறுப்பை திருவெல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், விளையாட்டு நலத்துறை அமைச்சரும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. சமீபகாலமாக அக்கோரிக்கை மிகவும் வலுப்பெற்று காணப்பட்டது. இதனிடையே, நேற்று நடைபெற்ற திமுகவின் பவள விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. துணை முதல்வர் பொறுப்பு உட்பட அமைச்சரவை மாற்றத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியும் தனது ஒப்புதலை வழங்கி இருந்தார்.

துணை முதல்வராக உதயநிதி:

இந்நிலையில், இன்று மாலை 03:30 மணிக்கு மேல் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், துணை முதல்வராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார்.  அதேவேளையில், அமைச்சர் பொன்முடி வனத்துறைக்கும், மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டு துறைக்கும், மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறைக்கும், ராஜ கண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறைக்கும், தங்கம் தென்னரசு நீதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா. ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கா. ராமச்சந்திரன் தமிழக அரசின் தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்கும் தருணத்திற்காக காத்திருக்கும் தொண்டர்கள்: