ஜூலை 06, தலைமை செயலகம் (Chennai News): சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று இரவு 7 மணியளவில் 6 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழ்நாட்டை மாநில அளவில் உலுக்கியுள்ள நிலையில், பலதரப்பில் இருந்தும் அரசுக்கு எதிராக கண்டன குரல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் & திமுக தலைவர் மு.க ஸ்டாலின், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வரின் எக்ஸ் பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. TVK Vijay Condemn on BSP Amstrong Killed: பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை: த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)