கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி (Turkey Earthquake), சிரியா, லெபனான் (Turkey Syria Earthquake) நாடுகளில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால் தற்போது வரை (Turkey Syria Earthquake Death Toll) 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நிலநடுக்கத்தை கணித்து கூறிய டச்சு ஆய்வாளர் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் (Afghanistan India Pakistan Belt Earthquake Alert) நாடுகளை மையமாக வைத்து அடுத்த நிலநடுக்கம் தொடர்பான தகவலையும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் (Afghanistan) நாட்டில் உள்ள பைசாபாத் (Fayzabad) நகரில் இருந்து தென்கிழக்கு திசையில் 100 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (Earthquake Today), ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை உணர்த்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். தற்போது வரை உயிர் சேதம் தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இல்லை. Cattle Recovered: பசுக்களை அசாம் மாநிலத்திற்குள் கடத்திய 2 பேர் கைது.. 24 கால்நடைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!
An earthquake with a magnitude of 4.3 on the Richter Scale hit 100km SE of Fayzabad, Afghanistan today at 6:47 am IST: National Centre for Seismology pic.twitter.com/Dc8pLrWzxe
— ANI (@ANI) February 13, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)