Air India Express Engine Flame: அபுதாபியில் இருந்து கேரளா புறப்பட்ட விமானத்தில் எஞ்சின் கோளாறு.. அவசர கதியில் அபுதாபியிலேயே தரையிறக்கம்.!

விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பிய சில நொடிகளில் எஞ்சினில் திடீரென தீப்பிடித்ததால், அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்ட விமானம் அவசர கதியில் மீண்டும் அங்கேயே தரையிறக்கப்பட்டது. நல்வாய்ப்பாக எந்த விபத்தும் ஏற்படவில்லை.

Air India Express Engine Flame: அபுதாபியில் இருந்து கேரளா புறப்பட்ட விமானத்தில் எஞ்சின் கோளாறு.. அவசர கதியில் அபுதாபியிலேயே தரையிறக்கம்.!
Air India Express Boeing 737 Flight | File Picture (Photo Credit: Wikipedia Commons)

பிப்ரவரி 03, அபுதாபி: ஏர் இந்திய (Air India Express) நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் ரக விமானம் B737-800 ரக IX 348 விமானம், இன்று அபுதாபியில் இருந்து கேரளா (Kerala) மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு (Abu Dhabi to Calicut) நகருக்கு புறப்பட்டது. விமானம் அபுதாபி விமான நிலையத்தில் மேலும்பி 1000 அடி உயரத்தை சென்றடைந்தபோது, எதிர்பாராத விதமாக விமானத்தின் ஒன்றாம் எண் எஞ்சினில் (Flame On Flight Engine) தீப்பற்றியுள்ளது. இதனையடுத்து, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானிகள், விமானத்தை அவசர கதியில் (Emergency Landing) தரையிறக்க அனுமதி வாங்கி தரையிறங்கினர். விமான குழுவினர் மற்றும் பயணிகளுக்கு எவ்வித அபாயமும் இல்லை. அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர். இந்த தகவலை ஏர் இந்திய நிறுவனம் மற்றும் மத்திய வான்வழி போக்குவரத்து துறை உறுதி செய்துள்ளது. Minister PTR Palanivel Thiagarajan: அரசு திட்டங்களுக்கு நான் நிதி கொடுப்பதில்லை என கூறுகிறார்கள் – அமைச்சர் பி.டி.ஆர் வேதனை.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 03, 2023 10:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).