Tamilnadu Finance Minister PTR Palanivel Thiagarajan With Chief Minister MK Stalin | File Picture (Photo Credit: PTI)

பிப்ரவரி 03: திமுக (DMK) அரசு 2021 சட்டப்பேரவை (Tamilnadu Assembly Poll 2021) தேர்தலில் வெற்றியடைந்து ஆட்சியை அமைத்ததும், தனது முதல் நிதியாண்டில் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு பல மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு அரசு கொடுத்த வெள்ளை அறிக்கையின்படி, நிதிநிலைமை காரணமாக அவற்றில் பல திட்டங்களை தற்சமயம் செயல்படுத்த வாய்ப்பே இல்லை என கூறப்பட்டது.

இதற்கிடையே அரசு ஊழியர்கள் தங்களின் சார்பு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த விஷயம் தமிழகத்தின் நிதி நிலைமையை தவிர்த்து, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் (PTR Palanivel Thiagarajan) நிதித்துறையை கையில் வைத்துக்கொண்டு திட்டங்களை செயல்படுத்துவது இல்லை, முதல்வர் நல்லவராக இருக்கிறார் என பல புரளிகள் கிளப்பி விடப்பட்டன. Trichy Chennai Highway Accident: சாலையை கடந்த கன்றுகுட்டிக்காக சடன் பிரேக்.. ஷேர் ஆட்டோ, லாரி, ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து.. 2 பேருக்கு மரண பயம்.!

M.K Stalin, Tamilnadu State Chief Minister, President of DMK Party (File Photo)

இந்நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "ஏற்கனவே ஜக்கடோ ஜியோ உட்பட பல யூனியன்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமைச்சர் பி.டி.ஆர் எங்களுக்கு நண்பர் இல்லை, அவர் எங்களை கண்டுகொள்வது இல்லை. நாங்கள் கேட்கும் கூடுதல் சிறப்பு பலன்களை நிறைவேற்றவிலை என கூறுகிறார்கள்.

அதேபோல, முதலமைச்சர் (Chief Minister) நல்லவர், நிதியமைச்சர் தான் அனைத்தையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளார் என்ற வதந்தி ஏற்கனவே வெளியாகி வருகிறது. இவை Macro Economical ரீதியாக நீங்கள் கூறுவது சரி. கமெர்சியல் வங்கி என்பது இருப்பு பிசினஸ். பணத்தை வங்கி கடனாக கொடுத்து அதற்கு வட்டி வாங்கி உபயோகம் செய்வார்கள். முதலீடு செய்யப்படும் வங்கிகளில் Moving Business மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 03, 2023 10:43 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).