டிசம்பர் 30, இஸ்லாமாபாத் (Pakistan News): அரசியல் ரீதியான குழப்பம், பயங்கரவாத பிரச்சனை, பொருளாதார சிக்கல், உணவு தட்டுப்பாடு என தவிர்த்து வரும் பாகிஸ்தானில், தற்போது சுகாதாரத்துறை மிகப்பெரிய சவாலை எதிர் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் தெற்கு சிந்து மாகாணத்தின் கராச்சி, ஹைதராபாத் மாவட்டம், தென்மேற்கு மாகாணத்தில் உள்ள சாமன் மாவட்டம், வடமேற்கு மாகாணத்தில் உள்ள பசாவர் மாவட்டத்தில் தற்போது போலியோ வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், "உலகிலேயே மிகவும் விரிவான செயல்திறன் கொண்ட போலியோ கண்காணிப்பு அமைப்பு பாகிஸ்தானில் இருக்கிறது. பலவீனமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்ட குழந்தைகளை போலியோ வைரஸ் தாக்கும். குழந்தைகளை நலமுடன் கவனிக்க வேண்டும். விரைவில் தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு வழங்குவது உறுதி செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளது. Houthi issued Warning to America: "அமெரிக்காவின் நட்பு நாடு வணிக கப்பல்கள் தாக்கப்படும்": எச்சரிக்கை விடுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.. செங்கடலில் தொடரும் பதற்றம்.!
Polio viruses have been detected in the environmental samples from four districts in #Pakistan, according to the country's Ministry of National Health Services Regulations and Coordination.
The ministry said the country has the most extensive and sensitive polio surveillance… pic.twitter.com/AkP40FBqkX
— IANS (@ians_india) December 30, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)