Houthi military spokesman Yahya Sarea | Yemenis rally (Photo Credit: @XHNews X)

டிசம்பர் 30, ஏமன் (World News): இஸ்ரேல் - பாலஸ்தீனியம் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற சூழ்நிலையானது நிலவுகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருவதால், மத்திய கிழக்கில் இருக்கும் இஸ்ரேலுக்கு எதிரான நாடுகள் தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் நடவடிக்கையை அதிகரித்து வருகின்றன.

நேட்டோவின் உதவி: ஏற்கனவே உள்நாட்டு பிரச்சனை காரணமாக மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. அதிகளவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் அந்நாட்டு அரசின் வேண்டுகோளை ஏற்று உதவிகள் செய்து வருகின்றன. அவ்வப்போது தனது சார்பில் கூட்டு படை பயிற்சி போன்றவற்றையும் வழங்கி வருகிறது. இது அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் மற்றும் பயங்கரவாத கும்பலுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: தற்போதைய இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் குழு, வணிக ரீதியாக செங்கடல் பகுதியில் பயணிக்கும் கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவதும், சிறை பிடிப்பதும் என சர்ச்சை செயல்களை தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு ஏமன் கிளர்ச்சியாளர்கள் குழு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Lorry Car Collison: டீக்கடையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து; 5 பக்தர்கள் பரிதாப பலி., 20 பேர் படுகாயம்.! 

செங்கடலில் தாக்குதல் தொடரும்: இது தொடர்பாக ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா, ஹவுதி அமைப்பால் நடத்தப்படும் அல்-மசிரா தொலைக்காட்சியில் பேசியபோது, "ஏமன் நாட்டின் மீது நடத்தப்படும் எந்த ஒரு சாத்தியமான ஆக்கிரமிப்பையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அதற்காக உறுதி எடுத்துள்ளோம். செங்கடல் பகுதியில் இஸ்ரேல் தொடர்பான வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடரும்.

வணிக கப்பல்களை தாக்குவோம்: வணிக கப்பல்களை பாதுகாப்பதில் நோக்கம் கொண்டிருக்கும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் பங்கேற்கும் நாடுகளுக்கும் நாங்கள் எச்சரிக்கை அனுப்புகிறோம்" என்று தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக செங்கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடரும் என ஹவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள், செங்கடல் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஹாலிவுட் திரைப்பட பாணியில் நடுக்கடலில் சென்றுகொண்டு இருந்த வணிக கப்பலை சிறைபிடித்து, கப்பலை கடத்தியது எப்படி என பிரத்தியேக வீடியோ எடுத்தும் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.