ஆகஸ்ட் 23, கியூவ் (World News): 2024 மக்களவைத்தேர்தலில் வெற்றி அடைந்து, தொடர்ந்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்து வெற்றிவாகை சூடிய இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), 3 நாட்கள் அரசுமுறை பயணமாக போலந்து (Poland) மற்றும் உக்ரைன் (Ukraine) நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல் 2 நாட்கள் போலந்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) ஆலோசனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், இன்று உக்ரைன் நாட்டின் தலைநகர் கியூவ்க்கு (Kyiv) சென்றுள்ளார். உக்ரைன் - ரஷியா இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் அதிபர்கள் மட்டும் பயணித்த அதிநவீன சிறப்பு இரயிலில் போலந்து சென்றடைந்தார். அங்கு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் (Volodymyr Zelensky) சந்தித்து ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச அளவில் பேச்சுக்கள் எழுகிறது. ஏனெனில் இந்தியா - ரஷியா ஒருங்கிணைந்த நட்பை பாரம்பரியமாக கொண்ட நாடுகள் என்பதால், போரின் முடிவு குறித்து சமாதான பேச்சிலும் அவர் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. கடத்த 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து, உக்ரைன் என்ற தனிநாடு உருவான பின்னர், அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. MPox Variant: அச்சச்சோ.. பேராபத்து.. கொரோனா போல உருமாறியது குரங்கம்மை.. இந்தோனேஷியாவில் அதிர்ச்சி..!
பிரதமர் நரேந்திர மோடி கியூவ் நகரில் காரில் பயணிக்கும் காட்சி:
#WATCH | Prime Minister Narendra Modi reaches Kyiv from Poland to begin his one-day visit to Ukraine.
This is the first visit by an Indian Prime Minister to Ukraine since its independence from the Soviet Union in 1991.
(Visuals from Kyiv) pic.twitter.com/wmy6zdBv5Q
— ANI (@ANI) August 23, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)