Mpox (Photo Credit: @upuknews1 X)

ஆகஸ்ட் 23, ஜகர்தா (World News): உலகளவில் கடந்த 2019ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல், கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் முடிவுக்கு வந்தது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியப்பட்ட பின்னர், அதனை மக்கள் செலுத்திக்கொண்டது மற்றும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பாதுகாத்தது போன்றவற்றால் கொரோனா (COVID 19) கட்டுக்குள் வந்தது. கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் குறைந்தது மக்களிடம் நிம்மதியை தந்தாலும், எதிர்காலத்தில் பெரிய அளவிலான வைரஸ் பரவல் என்பது அதிகம் இருக்கும் என உலக சுகாதார அமைப்பு (World Health Organization WHO) தெரிவித்து இருந்தது. Goat Plague Outbreak: குரங்கம்மையை தொடர்ந்து ஆடுகளுக்கு பரவுகிறது பிளேக் நோய்; மனிதர்களுக்கும் ஆபத்தா? விபரம் உள்ளே.! 

116 க்கும் அதிகமான நாடுகளில் எம்பாக்ஸ்:

இதனிடையே, கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் (Tedros Adhanom), ஆப்ரிக்க நாடுகளில் இருந்து கொடிய தாக்கத்தை ஏற்படுத்தும் எம்பாக்ஸ் வைரஸ் (MPox) பரவுகிறது என தெரிவித்து இருந்தார். அதனைத்தொடர்ந்து ஒட்டுமொத்தமாக 116 க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவிலும் சர்வதேச அளவிலான விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Hanuman Statue: அமெரிக்காவில் 90 அடி உயர அனுமன் சிலை திறப்பு.. 3வது பெரிய சிலை..! 

புதிய உருமாறிய வைரஸாக எம்பாக்ஸ்:

குறிப்பாக ஆப்பிரிக்கா சென்று வரும் இந்தியர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. இதனிடையே, இந்தோனேஷியாவை சேர்ந்த வயதான நபர் சமீபத்தில் ஆப்பிரிக்கா சென்று திரும்பியிருந்த நிலையில், அவரிடம் செய்யப்பட்ட சோதனையில் உருமாறிய எம்பாக்ஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தன்மைப்படுத்தப்பட்டுள்ள முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உருமாறிய எம்பாக்ஸ் வைரஸ் மொத்தமாக 7 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவிலான நாடுகள் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.