Turkey Syria Earthquake Today: மீண்டும் துருக்கி-சிரியாவில் பேரதிர்ச்சி சம்பவம்... அடுத்தடுத்த இரண்டு அதிபயங்கர நிலநடுக்கத்தால் 4 பேர் பலி; 213 பேர் படுகாயம்.!

41 ஆயிரம் பேரை 20 நாட்களுக்குள் இழந்த துருக்கி - சிரியாவில் மீண்டும் அந்நாடுகளின் எல்லைகளில் அதிபயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி அடுத்தகட்ட இழப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.

Turkey Syria Earthquake Today: மீண்டும் துருக்கி-சிரியாவில் பேரதிர்ச்சி சம்பவம்... அடுத்தடுத்த இரண்டு அதிபயங்கர நிலநடுக்கத்தால் 4 பேர் பலி; 213 பேர் படுகாயம்.!
Earthquake File Picture (Photo Credit: PTI)

பிப்ரவரி 21: துருக்கியில் (Turkey Syria Earthquake) கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் (Earthquake) 41 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கட்டிட (Buildings Collapsed) இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு உலக நாடுகள் (World Countries Help Turkey) மீட்பு பணியிலும், மருத்துவ பணியிலும் ஈடுபட்டு துருக்கி, சிரியா நாட்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறது. இந்த நிலையில், அங்கு மீண்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கி - சிரியா எல்லைப்பகுதியில் உள்ள ஹாட்டாய் (Hatay Province) மாகாணத்தில் ரிக்டர் அளவில் 6.3 மற்றும் 5.8 என இரண்டு முறை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர், 213 பேர் காயமடைந்துள்ளனர். அங்கு மீட்பு படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. MS Dhoni Last Match: பிரியாவிடையளிக்க நேரம் குறித்த எம்.எஸ் தோனி?.. சோகத்தில் ரசிகர்கள்.. நடக்கப்போவது என்ன?..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 21, 2023 08:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).