MS Dhoni Last Match: பிரியாவிடையளிக்க நேரம் குறித்த எம்.எஸ் தோனி?.. சோகத்தில் ரசிகர்கள்.. நடக்கப்போவது என்ன?..!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக, இந்தியாவில் பலராலும் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் முக்கியமான இடத்தை கொண்ட கிரிக்கெட் தல எம்.எஸ் தோனி நடப்பு ஐ.பி.எல் தொடருடன் ஓய்வு பெறலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
2023 ஐ.பி.எல் (Indian Premire League IPL 2023) தொடர் மார்ச் 31ம் தேதி அன்று தொடங்குகிறது. முதல் போட்டியாக அகமதாபாத் (Ahmedabad) மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் (Gujarat Titans Vs Chennai Super Kings) மோதுகின்றன. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் தோனி (MS Dhoni), மே 14ம் தேதியன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் தனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்ளவிருப்பதாக தெரியவருகிறது. இந்திய அணியாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகவும் அனுதினமும் உழைத்து வெற்றிக்கோப்பைகளை பெறவைத்ததில் தோனியின் (Mahendra Singh Dhoni) பங்கு வரலாற்றில் இருந்து அழிக்க முடியாதவை. ஆனால், தோனியின் ஓய்வு தொடர்பான அறிவிப்பு அவரால் உறுதி செய்யப்படவில்லை. Qazi Refused Perform Marriage: திருமண சடங்கின் போது பாடல்களை ஒலிக்கவிட்டதால் ஆத்திரம்.. கோபமடைந்த காஜி செய்த சம்பவம்.!
Never thought that @msdhoni might have to play his last match on my birthday. Hope they make it to the playoffs.#CSK #IPL2023 pic.twitter.com/u7jQZhLBWp
— Navneet Jha (@imnot_nav) February 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 20, 2023 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

