CSG Vs DD Qualifier 2: குவாலிபயர் 2.. நாளை சேப்பாக் - திண்டுக்கல் அணிகள் பலப்பரீட்சை..!

2025 டிஎன்பிஎல் 2வது தகுதி சுற்றுப் போட்டியில், நாளை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

CSG Vs DD Qualifier 2 (Photo Credit: Facebook)

ஜூலை 03, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கியது. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெற்று முடிந்தன. நடப்பு தொடரில், 28 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. இப்போட்டிகள், அனைத்தும் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. DD Vs TGC Eliminator: அஸ்வின் அதிரடி ஆட்டம்.. திண்டுக்கல் அபார வெற்றி..!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் (Chepauk Super Gillies Vs Dindigul Dragons):

இந்நிலையில், முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த சேப்பாக் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியை நாளை (ஜூலை 04) நடைபெறும் 2வது தகுதி சுற்றுப்போட்டியில் எதிர்கொள்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் (CSG Vs DD) அணிகள் நாளை (ஜூலை 04) 2வது தகுதி சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில், வெற்றி பெறும் அணி இறுதிபோட்டியில் திருப்பூர் அணியை எதிர்கொள்ளும். இவ்விரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், சேப்பாக் அணி 8 போட்டியிலும், திண்டுக்கல் அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

நேரலை விவரம்:

அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்:

கே ஆஷிக், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், என் ஜெகதீசன், விஜய் சங்கர், பாபா அபராஜித் (கேப்டன்), ஸ்வப்னில் சிங், எஸ் தினேஷ் ராஜ், அபிஷேக் தன்வார், லோகேஷ் ராஜ், ஜே பிரேம் குமார், எம் சிலம்பரசன், ஆஷிக் கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ், ஆர் ராஜன், அர்ஜுன் கான் சுன்பா ஸ்ரீனிவாஸ், ஆர் ராஜன், அர்ஜூன் கான் கிருஷ்ணா மூர்த்தி, ஆர். ராஜலிங்கம் ஜி, சச்சின் பி.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள்:

ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), சிவம் சிங், பாபா இந்திரஜித், மான் பாஃப்னா, ஆர் கே ஜெயந்த், ஹன்னி சைனி, எம் கார்த்திக் சரண், வருண் சக்கரவர்த்தி, டிடி சந்திரசேகர், சந்தீப் வாரியர், கணேசன் பெரியசுவாமி, விமல் குமார், ராஜ்விந்தர் சிங், எம் விஜு அருள், அதுல் விஜு அருள், அடுலேஷ் அருள்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement