Ronaldo Soulmate: ஆத்மதோழியுடன் ஆத்மார்த்த காதலில் ரொனால்டோ; வைரல் கிளிக்ஸ் இதோ.!

சர்வதேச அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி, திறமையால் உலகறிய வைத்த கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ. மைதானத்தில் வேகம், விவேகத்தில் சிறந்து செயல்படும் ரொனால்டோ, தனது குடும்ப வாழ்க்கையில் அளவற்ற அன்பை செலுத்தும் நபர் ஆவார்.

Ronaldo Soulmate: ஆத்மதோழியுடன் ஆத்மார்த்த காதலில் ரொனால்டோ; வைரல் கிளிக்ஸ் இதோ.!
Couple Georgina Rodríguez - Cristiano Ronaldo (Photo Credit: Instagram)

ஜனவரி 06, போர்ச்சுகல் (Sports News): போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), கடந்த 1992 ஆம் ஆண்டு தனது இளம் பருவத்தில், முதல் ஆட்டத்தினை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்டவர், தனது திறமையான ஆட்டத்தின் வெளிப்பாடு காரணமாக உலகளவில் கால்பந்தாட்டத்தில் பிரதானமாக அறியப்பட்டார்.

உடலை கட்டுக்கோப்புடன் வைப்பதில் விருப்பம்: தற்போது அவர் சவுதி அரேபியா வழிநடத்தும் அல்-நசர் அணிக்காக கால்பந்தாட்டத்தில் விளையாடி வருகிறார். இவரின் தலைமையிலான அணி தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகிறது. இதற்கு முன்னதாக மான்செஸ்டர் அணிக்காக தனது பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார். எப்போதும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் ரொனால்டோ, தீவிர உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வார். Chlorine Cylinder Leakage: திடீரென கசிந்த குளோரின் வாயு; பாதுகாப்பாக அகற்றும் பணியில் களமிறங்கிய அதிகாரிகள்.! 

திருமணம் செய்யாமல் மகிழ்ச்சியான வாழ்க்கை: ஜார்ஜினா கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரோனால்டோ, ஸ்பானிஷ் மாடலான ஜார்ஜினா ரோட்ரிகுயிஸ் (Georgina Rodríguez) என்பவருடன் உறவில் இருந்து வருகிறார். இருவரும் திருமணம் செய்யாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், சமீபத்தில் தம்பதிகள் இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகினர். முன்னாள் காதலியுடன் ரொனால்டோவுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது இரண்டு குழந்தைகள் என ஐந்து குழந்தைகளை தம்பதிகள் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அன்பு காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).