AFG Vs BAN 2nd T20I: வங்கதேச அணி அபார வெற்றி.. டி20 தொடரை கைப்பற்றி அசத்தல்..!
ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதிய இரண்டாவது டி20ஐ போட்டியில், வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அக்டோபர் 03, ஷார்ஜா (Sports News): ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில், நடந்து முடிந்த முதலாவது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் - வங்கதேச (AFG Vs BAN) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டி, இன்று (அக்டோபர் 03) இரவு 8 மணிக்கு ஷார்ஜா மைதானத்தில் போட்டி தொடங்கியது. AFG Vs BAN 2nd T20I: வங்கதேச அணி அசத்தல் பவுலிங்.. ஆப்கானிஸ்தான் அணி 147 ரன்கள் குவிப்பு..!
ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் (Afghanistan Vs Bangladesh):
இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 147 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 38 ரன்கள், ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ரன்கள் அடித்தனர். வங்கதேச அணி சார்பில் நாசும் அகமது மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
வங்கதேச அணி வெற்றி:
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 19.1 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 150 ரன்கள் அடித்தது. இதன்மூலம், 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியது. அதிகபட்சமாக ஜேக்கர் அலி 32, ஷமிம் ஹொசைன் 33, நூருல் ஹசன் 31* ரன்கள் அடித்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்மத்துல்லா உமர்சாய் 4, ரஷித் கான் 2, நூர் அகமது மற்றும் முஜீப் உர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, வஃபியுல்லா தாரகில், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, அப்துல்லா அஹ்மத்சாய், ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான்.
வங்கதேச அணி வீரர்கள்:
தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹாசன், ஜேக்கர் அலி (கேப்டன்), நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், நாசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.
(The above story first appeared on LatestLY on Oct 03, 2025 11:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

