அக்டோபர் 03, ஷார்ஜா (Sports News): ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில், நடந்து முடிந்த முதலாவது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் - வங்கதேச (AFG Vs BAN) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டி, இன்று (அக்டோபர் 03) இரவு 8 மணிக்கு ஷார்ஜா மைதானத்தில் போட்டி தொடங்கியது. AFG Vs BAN 2nd T20I, Toss: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20ஐ.. வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!
ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் (Afghanistan Vs Bangladesh):
ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஜேக்கர் அலி தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 147 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 38 ரன்கள், ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ரன்கள் அடித்தனர். வங்கதேச அணி சார்பில் நாசும் அகமது மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, வஃபியுல்லா தாரகில், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, அப்துல்லா அஹ்மத்சாய், ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான்.
வங்கதேச அணி வீரர்கள்:
தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹாசன், ஜேக்கர் அலி (கேப்டன்), நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், நாசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.