AFG Vs BAN 3rd ODI: ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்டிங்.. வங்கதேசம் வெற்றிக்கு 294 ரன்கள் இமாலய இலக்கு..!
ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 293 ரன்கள் அடித்துள்ளது.
அக்டோபர் 14, அபுதாபி (Sports News): ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில் வங்கதேச அணி 3-0 என ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை வென்றது. இதனையடுத்து, நடந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் - வங்கதேச (AFG Vs BAN) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, இன்று (அக்டோபர் 14) மாலை 5.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் தொடங்கியது. SLW Vs NZW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில்.. இலங்கை அணி 258 ரன்கள் குவிப்பு..!
ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் (Afghanistan Vs Bangladesh):
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, மெஹிதி ஹசன் மிராஸ் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 293 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 95 ரன்கள், ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 ரன்கள் அடித்தனர். இறுதியில், அதிரடியாக விளையாடிய சீனியர் வீரர் முகமது நபி 37 பந்தில் 62* ரன்கள் அடித்தார். வங்கதேச அணி சார்பில் சைஃப் ஹசன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், நங்கேயாலியா கரோட், ஏ.எம்.கசன்ஃபர், பிலால் சமி.
வங்கதேச அணி வீரர்கள்:
சைஃப் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், நஹித் ராணா.