AFG Vs BAN 3rd ODI, Toss: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. ஆறுதல் வெற்றி பெறுமா வங்கதேச அணி..?

ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

AFG Vs BAN 3rd ODI, Toss: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. ஆறுதல் வெற்றி பெறுமா வங்கதேச அணி..?
AFG Vs BAN 3rd ODI, Toss (Photo Credit: @dailycricketbd X)

அக்டோபர் 14, அபுதாபி (Sports News): ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில் வங்கதேச அணி 3-0 என ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை வென்றது. இதனையடுத்து, நடந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் - வங்கதேச (AFG Vs BAN) அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, இன்று (அக்டோபர் 14) மாலை 5.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. SLW Vs NZW, Toss: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; இலங்கை - நியூசிலாந்து 15வது லீக்.. இலங்கை மகளிர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

ஆப்கானிஸ்தான் எதிர் வங்கதேசம் (Afghanistan Vs Bangladesh):

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, மெஹிதி ஹசன் மிராஸ் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆப்கானிஸ்தான் அணி 10 போட்டிகளிலும், வங்கதேச அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், நங்கேயாலியா கரோட், ஏ.எம்.கசன்ஃபர், பிலால் சமி.

வங்கதேச அணி வீரர்கள்:

சைஃப் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், முகமது நைம், மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், நஹித் ராணா.

(The above story first appeared on LatestLY on Oct 14, 2025 05:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).