SLW Vs NZW, Toss: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; இலங்கை - நியூசிலாந்து 15வது லீக்.. இலங்கை மகளிர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இலங்கை மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 15வது லீக் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அக்டோபர் 14, கொழும்பு (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், இன்று (அக்டோபர் 14) இலங்கை மகளிர் அணி - நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 15வது லீக் போட்டி, இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறுகிறது. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. IND Vs WI India Victory: அசத்திய கே.எல். ராகுல்.. இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மாஸ் வெற்றி.!
இலங்கை மகளிர் அணி எதிர் நியூசிலாந்து மகளிர் அணி (Sri Lanka Women Vs New Zealand Women):
சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி, சோஃபி டெவின் தலைமையிலான நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இலங்கை அணி 3 போட்டியில் விளையாடி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. மறுபுறம், நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இலங்கை மகளிர் அணி:
ஹாசினி பெரேரா, சாமரி அத்தபத்து (கேப்டன்), விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, பியூமி வத்சலா படல்கே, சுகந்திகா குமாரி, மல்கி மதரா, இனோகா ரணவீர.
நியூசிலாந்து மகளிர் அணி:
சூசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டெவின் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், ப்ரீ இல்லிங், ஈடன் கார்சன்.
(The above story first appeared on LatestLY on Oct 14, 2025 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

