AFG Vs HKG: ஆசிய கோப்பை 2025; முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் நாளை மோதல்..!

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரின் முதல் லீக் போட்டியில், குரூப் பி பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் எதிர் ஹாங்காங் அணிகள் நாளை (செப்டம்பர் 09) மோதுகின்றன.

AFG Vs HKG: ஆசிய கோப்பை 2025; முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் நாளை மோதல்..!
Asia Cup 2025 (Photo Credit: @groundcheck360 X)

செப்டம்பர் 08, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 தொடர், நாளை (செப்டம்பர் 09) முதல் தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. 2025 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். சோனி லிவ் ஓடிடி தளத்திலும், நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. PKL 2025: பிகேஎல் 2025; ஹரியானா - பெங்களூரு.. மற்றொரு ஆட்டத்தில் புனேரி - பாட்னா அணிகள் இன்று மோதல்..!

ஆப்கானிஸ்தான் எதிர் ஹாங்காங் (Afghanistan Vs Hong Kong):

இந்நிலையில், முதல் லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் (AFG Vs HKG) அணிகள் நாளை (செப்டம்பர் 09) மோதுகின்றன. இப்போட்டி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, யாசிம் முர்தாசா தலைமையிலான ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும், ஹாங்காங் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நூர் அஹ்மத், அல்லா கசன்ஃபர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, ஃபரீத் அகமது மாலிக், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், முகமது இஷாக், ஷராபுதீன் அஷ்ரஃப், குல்பாடின் நைப்.

ஹாங்காங் அணி வீரர்கள்:

ஜீஷன் அலி, பாபர் ஹயாத், நிஜாகத் கான், அன்ஷுமன் ராத், மார்ட்டின் கோட்ஸி, யாசிம் முர்தாசா (கேப்டன்), அய்சாஸ் கான், நஸ்ருல்லா ராணா, எஹ்சான் கான், அலி ஹாசன், அதீக் இக்பால், கல்ஹான் சல்லு, ஆயுஷ் சுக்லா, கிஞ்சித் ஷா, மொஹமத் வஹீத், ஷாஹித் வாசிஃப், முகமது கசன்பர்.

(The above story first appeared on LatestLY on Sep 08, 2025 10:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).