செப்டம்பர் 08, விசாகப்பட்டினம் (Sports News): 2025 ப்ரோ கபடி லீக் (PKL) 12வது சீசன் தொடர், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், யு மும்பை, ஹரியானா ஸ்டீலர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், உபி யோதாஸ், டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும், 2025 ப்ரோ கபடி லீக் சீசன் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். ENG Vs SA ODI Series: தொடரை இழந்தாலும் இறுதிப்போட்டியில் இமாலய வெற்றி... இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டியில் 27 ஆண்டுகள் கழித்து இங்கி., சாதனை.!
ப்ரோ கபடி லீக் 2025 இன்றைய போட்டிகள் (Pro Kabaddi League 2025 Today Matches):
இதில், நேற்று (செப்டம்பர் 07) இரவு 8 மணிக்கு நடந்த 19வது லீக் போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் 34-44 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் தோல்வியை தழுவியது. தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நடந்த 20வது லீக் போட்டியில், டபாங் டெல்லி 36-35 என ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 08) இரவு 8 மணிக்கு நடைபெறும் 21வது லீக் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - பெங்களூரு புல்ஸ் (Haryana Steelers Vs Bengaluru Bulls) அணிகளும், இரவு 9 மணிக்கு 22வது லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள புனேரி பல்தான்ஸ் - பாட்னா பைரேட்ஸ் (Puneri Paltan Vs Patna Pirates) அணிகளும் மோதுகின்றன.