BAN Vs AFG, Toss: வங்கதேச அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. ஆப்கானிஸ்தான் சுழல் ஜாலம் பலிக்குமா..?
ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில், வங்கதேசம் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 9வது லீக் போட்டியில், வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
செப்டம்பர் 16, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டி, செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும். குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். Apollo Tyres: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சர்.. அப்பல்லோ டயர்ஸ் ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்..!
வங்கதேசம் எதிர் ஆப்கானிஸ்தான் (Bangladesh Vs Afghanistan):
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 16) 9வது லீக் போட்டியில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி, ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 12 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், வங்கதேச அணி 5 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
வங்கதேச அணி வீரர்கள்:
தன்சித் ஹசன் தமீம், சைஃப் ஹாசன், லிட்டன் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், மஹேதி ஹசன், நூருல் ஹசன், ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
செடிகுல்லா அடல், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நூர் அஹ்மத், அல்லா கசன்ஃபர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
(The above story first appeared on LatestLY on Sep 16, 2025 07:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

