செப்டம்பர் 16, மும்பை (Sports News): மத்திய அரசாங்கம் சமீபத்தில், அனைத்து சூதாட்ட செயலிகளையும் தடை செய்து உத்தரவிட்டது. இதனால், ட்ரீம் 11 இன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை பிசிசிஐ (BCCI) ரத்து செய்தது. இதன்காரணமாக, ஆசிய கோப்பையில் இந்திய ஆண்கள் அணியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பெண்கள் அணியும் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடி வருகின்றன. இதனையடுத்து, பிசிசிஐ புதிய ஸ்பான்சருக்கான டெண்டர்களை வெளியிட வேண்டியிருந்தது. SL Vs HKG: ஹாங்காங் நிலையான ஆட்டம்.. இலங்கை வெற்றிக்கு 150 ரன்கள் இலக்கு..!
புதிய ஸ்பான்சர்:
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 16) செவ்வாய்க்கிழமை மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் இந்திய அணியின் ஸ்பான்சர்ஷிப் ஏலம் நடைபெற்றது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres Indian Cricket Jersey Sponsor) பெற்றுள்ளது. கேன்வா 544 கோடி ரூபாய், ஜே.கே. சிமென்ட்ஸின் 477 கோடி ரூபாய் என ஏலத்தில் போட்டியிட்ட நிலையில், 579 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து அப்பல்லோ டயர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம், மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும். இதில், 121 இருதரப்பு ஆட்டங்கள் மற்றும் 21 ஐசிசி போட்டிகளை உள்ளடக்கியது ஆகும்.
அப்பல்லோ டயர்ஸ்:
இந்த ஒப்பந்தம் மூலம், ஒரு ஆட்டத்திற்கு 4.77 கோடி ரூபாய் வழக்கப்படும். இருப்பினும், இருதரப்பு மற்றும் ஐ.சி.சி போட்டிகளுக்கு இடையிலான மதிப்பு வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். பிசிசிஐ நிர்ணயித்த அடிப்படை விலை இருதரப்பு விளையாட்டுகளுக்கு 3.5 கோடி ரூபாய், உலகக் கோப்பை போட்டிகளுக்கு 1.5 கோடி ரூபாய் ஆகும். இதனையடுத்து, இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போது, புதிய ஸ்பான்சரின் லோகோ காட்சிப்படுத்தப்படும். செப்டம்பர் 30, அக்டோபர் 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கான்பூரில் நடைபெறும் போட்டிகளுக்கு ஜெர்சிகளை தயார் செய்ய, இந்தியா ஏ அணியை முன்கூட்டியே தேர்வு செய்யுமாறு பிசிசிஐ தேர்வாளர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.